07

சிறுநீரக நோய் பரம்பலை கட்டுப்படுத்தும் நோக்கில் அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் அநுராதபுரம் மகாவுலன்குலம திப்பட்டுவாவ ஸ்ரீ விஜய விகாரையில் இடம்பெற்றது.

 

திப்பட்டுவாவ ஸ்ரீ விஜய விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் பிரித் பாராயணம் செய்யப்படுகையில் விகாரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீர்த்தொகுதியை திறந்து வைத்ததன் பின்னர் தலாவ, பஹலதலாவ, கல்நேவ, திறப்பனே ஆகிய பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 10 நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை தொலைதூர கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தினூடாக திறந்து வைத்தார்.

 

சிறுநீரக நோய் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் செயற்திட்டம் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அமைச்சர் மஹிந்த அமரவீர, வடமத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

04 05 06 08 09 01 03

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்