Presidential Media Unit Default Banner

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனா அம்மையாரின் வாக்குறுதிக்கமைய வழங்கிய நிதியுதவியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹம்துல்லா அவர்களால் உரிய காசோலை ஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

தமது நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அயலிலுள்ள நட்பு நாடுகளுக்கு பங்களாதேஷ் வழங்கும் உதவிகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அது இருதரப்பு உறவுகளின் சிறப்பான பண்பாகுமென தெரிவித்தார்.

 

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் அண்மைக்காலத்தில் முன்னேறியுள்ளதுடன், அந்த உறவுகளை அனைத்து துறைகளிலும் உயர்த்துவது பங்களாதேஷின் குறிக்கோளாகும் என்று பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

 

அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனரமைப்பு திட்டங்களில் பங்களாதேஷ் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் எடுத்துக்கூறினார். அவற்றிலிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்பு தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

பங்களாதேஷில் பயிரிடப்படும் வறட்சிக்கு தாக்குப் பிடிக்கும் பயிர் விதைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தக்கூடிய சாத்தியங்களை ஆராய்ந்து பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்