01 (4)

அனர்த்தத்துக்குள்ளான இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சர்வதேச சமூகம் அர்ப்பணிப்புடன் முன்வந்தமை தற்போதைய அரசாங்கத்தின் நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

நாட்டுக்கு வருகை தந்துள்ள மாலைதீவு வெளிநாட்டமைச்சர் கலாநிதி மொஹமட் அஸீம் அவர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக மாலைதீவு அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்காக ஜனாதிபதி அவர்கள் மாலைதீவு அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

அங்கு கருத்து தெரிவித்த மாலைதீவு வெளிநாட்டு அமைச்சர், பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

 

திடீர் அனர்த்தத்தினால் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு மாலைதீவு அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை மாலைதீவு வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார்.

 

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளை நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் அனைத்து உறவுகளையும் பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்தார்.

 

இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் சிலர் குற்றம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாலைதீவு வெளிநாட்டமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

 

வெளிநாட்டு அiமைச்சின் செயலாளர் எசல வீரக்கோன், மாலைதீவு உயர்ஸ்தானிகர் Zahiya Zareer ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்