01 (26)

அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

பதவியுயர்வு பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமது தொழிற்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அது தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தமது அறிவு மற்றும் ஆற்றல் ஊடாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் விருப்பத்துடன் இருப்பதாக சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அபிவிருத்தி அலுவலர்கள் சங்கம் மற்றும் சுதந்திர பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்