1 (28)

அம்பலங்கொட தர்மாசோக்க வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அழகியற்கலைப் பிரிவுக் கட்டிடத்தை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (02) பிற்பகல் மாணவர்களிடம் கையளித்தார்.

பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியின் கீழ் 400 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நினைவுப் பலகையைத் திறந்து வைத்து கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், கலைகளும் இசையும் ஆன்மீக சமூகமொன்றினை உருவாக்குவதற்கான பின்னணியை ஏற்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டார்.

போதையிலிருந்து விடுபட்ட சிறந்த சமூகமொன்றினைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய செயற்திட்டங்களில் பாடசாலை மாணவர்களும் பங்கேற்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாடசாலையின் அதிபர் ஹசித்த கேசர வெத்தமுனி அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனிடையே காலி, கோனாபீனுவல சாராலங்கார வித்தியாலய மாணவனது வேண்டுகோளுக்கு இணங்க இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் அவ்வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தார்.

வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை அப்பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றதுடன், சிறப்பான திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் பரிசில்கள் வழங்கினார்.

பாடசாலையின் சங்கீதப் பிரிவும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ஷான் ஜாகொடவினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்ர ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2 (30)

3 (16)

4 (17)

5 (19)

6 (13)

7 (10)

8 (13)

01 (44)

02 (46)

03 (33)

05 (28)

06 (25)

07 (22)

08 (21)

09 (18)

12 (21)

14 (16)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்