05

அரசாங்கம் இன்று அல்லது நாளை வீழ்ந்துவிடும் என சிலர் எண்ணிக்கொண்டிரு;ந்தபோதும் அரசாங்கம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த ஜனாதிபதி> மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப அரசாங்கத்தின் பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

 

இன்று (13) முற்பகல் வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

இந்த நாட்டின் விவசாய சமூகத்தின் எதிர்காலத்தையும் நாட்டின் சுபீட்சத்தையும் கட்டியெழுப்புவதற்கு விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துதல் மற்றும் சிறந்த அரசாங்க நிர்வாகத்தினூடாகவே முடியுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி> இதற்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

 

ஒரு நாட்டின் காணி உரிமை மக்களுக்கு உரித்தாவதைப்போன்று விவசாய நிலங்களின் உரிமை விவசாய சமூகத்திற்குச் சொந்தமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி> இதற்காக அரசாங்கத்தின் பொறுப்புக்களும் கடமைகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

 

பல தசாப்தங்களாக காணி உரிமை இல்லாமலிருந்த ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு இந்த உரிமையைப் பெற்றுக்கொடுக்க முடிந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி> இன்று ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு அவர்களது பல தலைமுறைக்கு கிடைக்காத உரிமை கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

 

இன்று அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபட்டவர்களுக்காக அநேகமானோர் தட்டிக்கழித்துவந்த பொறுப்பாகும் என்றதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

 

வரட்சியின் காரணமாக விவசாயத்திட்டங்கள் மற்றும் இலக்குகள் சவாலுக்குட்படுத்தப்பட்ட காரணத்தினால் பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடை நூற்றுக்கு 40 விகிதம் விழ்ச்சிடைந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி> இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான பலர் மகிழ்ச்சியடைந்தபோதும் இயற்கை அவ்வளவு கருணையற்றதொன்றல்ல என்றும் பலர் எதிர்பார்ப்பதுபோன்று நாட்டுக்கு ஏற்படும் அனர்த்தம் இயற்கையின் ஆசீர்வாதத்துடன் இடம்பெறுவதில்லை எனக் குறிப்பிட்டார்.

 

காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் சில காணி உரிமையாளர்களுக்கான உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஊவா மாகாண சபையினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, விஜித் விஜயமுனி சொயிசா, ரஞ்சித் மத்துமபண்டார, பிரதி அமைச்சர் சுமேத ஜீ ஜயசேன, ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க, விசேட கருத்திட்டப் பணிப்பாளர் முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இதேநேரம் வெல்லவாய தள வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு இன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன  அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு முதலாவது நோயாளியைப் பதிவு செய்யும் நடவடிக்கையையும் ஜனாதிபதி ஆரம்பித்துவைத்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் பணிக்குழாம் ஊழியர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார்.

 

ஊவா மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் குமாரசிறி ரத்னாயக்க வைத்திய அதிகாரி மஞ்சுல ஏபா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

03 06 04 07 08

02

03

04

06

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்