1

அரசினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள் நாடு முன்னர் காணப்பட்ட நிலை மற்றும் தற்போதுள்ள நிலைக் குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டிற்கு தேவையான மாற்றங்களை எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் தொடர்ந்தும் நிறைவேற்றுவேன் என இன்று (16) பிற்பகல் வரக்காபொல ஆதார வைத்தியசாலையின் நவீன கருவிகளுடன் கூடிய புதிய ஆறு மாடி மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாட்டின் சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் மிக தெளிவானது என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் சுயாதீன நீதிமன்ற கட்டமைப்பொன்று தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

இலவச சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு அரசினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் சுகாதார துறையில் நிறைவேற்றப்பட முடியாது காணப்பட்ட பல விடயங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பல்தேசிய நிறுவனங்களின் பின்னால் செல்வதற்கு அரசு ஒருபோதும் தயாராக இல்லை என்பதுடன் மக்கள் நாட்டிற்காக தமக்கு வழங்கிய பொறுப்புக்களை சரியான முறையில் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

மருத்துவமனை கட்டிடங்களை அமைக்கும்போது மருத்துவமனையின் தேவைகளைப் போன்றே அங்கு பணிபுரிபவர்களின் வசதிகள் குறித்தும் கவனஞ்செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட மருத்துவமனையின் ஆளணியினர் எதிர்கொள்ளும் பாரிய சிக்கலான விடுதிவசதிகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுகாதார அமைச்சராக சேவையாற்றியபோது அவரால் அடிக்கல் நாட்டப்பட்ட இவ் மருத்துவமனைக் கட்டிடம் 1103 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக் கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதன் சத்திரசிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும்  குறை பிரசவ குழந்தை பிரிவு என்பவற்றையும் பார்வையிட்டார்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சித் சியபலாபிட்டிய,  இராஜாங்க அமைச்சர் சம்பிக பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி திருமதி எஸ்.எம்.என்.எஸ்.எம்.மல்லவஆரச்சி உள்ளிட்ட மருத்துவர்கள், தாதிகள் மற்றும் மருத்துவமனை பணித்தொகுதியினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2 5 6 8 10 11 12

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்