Maithripala Sirisena - 01

பாராளுமன்ற அரச கணக்குக் குழுவினால் 2017ஆம் ஆண்டுக்காக நடத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டுக்கமைய வினைத்திறனாக செயற்பட்ட அரச அலுவலகங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (05) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது 109 அரச நிறுவனங்கள் பாராட்டைப்பெற்றதுடன், சிறப்பான நிதி முகாமைத்துவத்தைப் பேணிவந்த 63 நிறுவனங்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், அதனை அடையாளப்படுத்தும் முகமாக சில நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் பதக்கங்களை வழங்கினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, அரச கணக்குக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்றத்தின் பதில் கடமை பொதுச் செயலாளர் நீல் இத்தவெல்ல, அரச கணக்குக்குழுவின் உறுப்பினர்களாகிய காவிந்த ஜயவர்தன, பந்துல லால் பண்டாரிகொட உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்