02

அரச துறையினை பலப்படுத்துவதைப் போன்று அனைத்து பிரிவூகளிலும் உள்ள தனியார் துறைகளையூம் மேம்படுத்துவது அரசின் கொள்கையாகுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Dialog Axiata நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை இன்று (07) முற்பகல் அங்குரார்ப்பணம் செய்யூம் நிகழ்வில் கலந்துகொண்டபோதே கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கட்டிடம் கொழும்பு -10 யூனியன் பிளேஸ் டயலொக் தலைமை நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது.

சர்வமத ஆசீர்வாதத்துடன் புதிய கட்டிடம் ஜனாதிபதி அவர்களால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அத்துடன் புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள அலுவலக முறைமையின் பணிகளையூம் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

அதன் பணிகளை ஆரம்பித்து வைத்து முதலில் திம்புலாகலையில் வனவாச தேரர் வண. மாதுருஓய விஜித்தாலங்கார தேரர் அவர்களுடன் ஜனாதிபதி நேரடியாக தொடர்பு கொண்டார். அத்தோடு சுகவீனமுற்று இருக்கின்ற வனவாச தேரர் அவர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்கள் அவர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்தார். அதேவேளை திம்புலாகல வனவாச தேரர் அவர்கள் அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

அதன் பின்னர் மெதிரிகிரிய மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சிலர் ஜனாதிபதி அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டனர்.

கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மேம்படுத்துவதற்கு புதிய அரசு மேற்கொண்டுள்ள எதிர்கால நடவடிக்கைகள் எவை என ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள்இ கிராமிய பிள்ளைகளுக்கு உயர் கல்வியை வழங்குவதற்காக கல்வித்துறையில் விரிவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி என்ற hPதியில் முன்னெடுத்துள்ள நடவடிக்கை யாதென ஒரு மாணவன் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த ஜனாதிபதி பாரிய சமூக தொல்லையாக மாறியிருக்கின்ற போதைப்பொருள் தொல்லையில் இருந்து இந்நாட்டின் பிள்ளைகளை விடுவிப்பதையே தமது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகக்கருதி நிறைவேற்றுகின்ற அதேவேளையில் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய அனைத்து பாதுகாப்பையூம் வழங்குவதற்கு தனது அரசு அர்ப்பணிப்புடன் செயலயாற்றுவதாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர்களான மங்கள சமரவீரஇ நவீன் திஸாநாயக்கஇ துமிந்த திஸாநாயக்கஇ கயந்த கருணாதிலக்க ஆகியோருடன் ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன, கொழும்பு நகர பிதா எம்.ஐ.எம்.முஸாமில், டயலொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹென்ஸ் விஜயசூரிய ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

10 09 07 06 04 03 01

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்