01

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) கைச்சாத்திட்டார்.

 

அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 21,000 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூரின் குறித்த திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது.

 

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு தேவையானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அனைத்து ஆவணங்களும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களினால் பரிசீலனை செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களினால் அந்த ஆவணங்கள் சான்றுப்படுத்தப்பட்டன.

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக உடனடியாக அந்த ஆவணங்களை சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்