15

தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்றுகின்ற அதேவேளையில் சமூகத்திற்கு பாரிய துன்பமாக இருக்கின்ற போதைப்பொருள் தொல்லையிலிருந்து சமூகத்தினை பாதுகாப்பதற்கான பாரிய பொறுப்பு கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நாட்டுக்குள் போதைப்பொருட்கள் பெருகிவருவதை தடுப்பதற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டத்தை விட விரிவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்துவதற்கு கடற்படை தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை கடற்படை முகாமில் புதிய சமுத்திர விஞ்ஞானபீட கட்டட தொகுதியை அங்குரார்ப்பணம் செய்யூம் நிகழ்வில் நேற்று (28) முற்பகல் கலந்துகொண்டபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்வேறு கடத்தல்காரர்களிடமிருந்து கரையோர பிரதேசங்களை பாதுகாப்பது இன்று பெரும் சிக்கலாக மாறியிருக்கினறது என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பவை பொதுமக்களுடைய பங்கேற்புடன் கடத்தல்காரர்களிடமிருந்து கரையோர பிரதேசத்தை பாதுகாத்து கொள்வதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

எவ்வித வேற்றுமையூம் இன்றி அந்தஸ்து பாராமல் அனைவருக்கும் சட்டத்தை ஒரே விதமாக செயற்படுத்துகின்ற அரசு என்ற விதத்தில் தவறாளிகளுக்கு தண்டனை அளிப்பதற்கும் அரசு எந்தவிதத்திலும் தயங்காமல் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் 20 மற்றும் 22 வருட சேவைக்காலத்தை நிறைவூசெய்து 40இ 45 போன்ற வயதில் தமது வாழ்க்கையில் பெற்ற அறிவூ புலமை மற்றும் அனுபவம் என்பவற்றை பயனுறுதி மக்கவகையில் நாட்டுக்கு வழங்கக்கூடிய விதத்தில் கடற்படையில் இருந்து விலகிச் செல்லும் உத்தியோகத்தர்கள் தமது விருப்பத்தின் பேரில் அரச சேவையில் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வேலைத்திட்டம் ஒன்றையூம் தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று முற்பகல் திருகோணமலை கடற்படை முகாமுக்கு விஜயம் மேற்கொண்ட கட்படைத் தளபதி அவர்களை ரியல் அட்மிரல் ஜயந்த பெரேரா வரவேற்று அழைத்துச் சென்றார். இதன்போது பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யூ.டி பஸ்நாயக்க அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி அவர்களின் விஜயத்தை குறிக்கும் விதமாக முதலில் முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்று நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்பின்னர் ஜனாதிபதி அவர்களுக்காக இலங்கை கடற்படையின் விசேட அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய சமுத்திர விஞ்ஞான பீட கட்டட தொகுதியை அங்குரார்ப்பணம் செய்த ஜனாதிபதி அவர்கள் கட்டடத் தொகுதியை பார்வையிட்டார். இக்கட்டடம் அனைத்து பயிற்சி வசதிகளைக் கொண்ட 10 கட்டடங்களைக் கொண்ட விஞ்ஞான பீட வளாகத்தின் முதற் கட்டமாகும்.

இதன்போது கடெட் பயிற்சிக்காக திருகோணமலை கடற்படை முகாமுக்கு வருகைதந்த மாணவ மாணவிகளை சந்தித்த ஜனாதிபதி அவர்ளுடன் அளவளவினார். அதன்பின்னர் கடற்படை முகாமின் இற்ங்குதுறைக்கு சென்ற ஜனாதிபதி புதுப்பிக்கப்பட்ட கப்பலொன்றை வெள்ளோட்டம் விடும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இன்று முற்பகல் சுமார் 4 மணித்தியாலங்களை திருகோணமலை கடற்படை முகாமில் களித்த ஜனாதிபதி அவர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளின் பின்னர் பொழுதுபோக்காக கடற்படை இசைக் குழுவினருடன் இணைந்து பாடல்களைப்பாடி மாலைப்பொழுதை இனிமையாக களித்தார்.
01 02 03 04 07 08 09

18 17 16 13 12 11 10 08 05 04 02 01

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்