08

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால், சீரற்ற காலநிலை மாற்றங்களின் காரணமாக ஏற்படும் வெள்ளபெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடைபெறும் காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள்நலன் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக  மேற்கொள்ளுமாறு அரச அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளோடு இணைந்து அதிக மழைவீழ்ச்ச்சியின் காரணமாக வெள்ளம், மண்சரிவு, மற்றும் பாறை வீழ்தல் போன்ற அசம்பாவிதங்களின் போது உடனடி நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு அனைத்து அமைச்சு அதிகாரிகள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய செயலாளர்கள் போன்றோருக்கு விசேட சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசரகாலத்தின் போது தேவையான இடப்பெயர்வு மற்றும் பொதுநல நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் மதிப்புக்குரிய பிரதமர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்