06

இரத்மலான கொத்தலாவலபுர சமாதி பௌத்த நிலையத்தின் தாது கோபுரத்தின் கலசத்தை  திரைநீக்கம் செய்யூம் புண்ணிய வைபவம் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (08) காலை இடம்பெற்றது.

இன்று காலை விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சமய நிகழ்வூகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றதோடு, விஹாராதிபதி வண. மாப்பொலகம புத்தசிறி தலைமை தேரர் அவர்களை சந்தித்து நலம் விசாரித்து அளவளாவினார்.

இந்நிகழ்வில் சியம் மகாபீடத்தின் கோட்டை சாமசிறி தர்ம தேரர்கள் சபையின் மகாநாயக்க இத்தேபானே தம்மாலங்கர தேரர் அவர்கள், றுகுனு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பல்லந்தர சுமனஜோதி நாயக்க தேரர் அவர்கள், கோட்டே நாகவிஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர் உள்ளிட்ட தேரர்களும் விஜயதாச ராஜபக்ஷ, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் விஹாரையின் பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
05 (1) 03 (1) 02 (2)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்