3

கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பொன்று இன்று (07) Phnom Penh நகரில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN அவர்களும் கலந்துகொண்டார்.

இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இதன்போது விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த மாநாட்டில் கம்போடிய பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றியதுடன், இலங்கை சார்பாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் மாநாட்டில் உரையாற்றினார்.

கம்போடிய வர்த்தக குழுவின் தலைவர் Neak Okhna Kith Meng மற்றும் இலங்கை கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் சாரங்க விஜேரத்ன உள்ளிட்ட இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1

2

4

5

6

7

8

9

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்