1 (16)

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலர்கள் சங்கம் தனது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு தெரியப்படுத்தியதுடன், அந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வகள் தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

 

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு, குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்குபடுத்தல் சேவை, அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு, வெளிநாட்டு தூதரக சேவையில் அதிகாரம்பெற்ற அலுவலர்களை இணைத்தக் கொள்ளுதல், பயிற்சி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை உற்பத்தித்திறனாக பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சேவையை மேலும் மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளும் ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

 

அமைச்சர்களான எஸ்.பீ.நாவின்ன, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க, தாபனப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.டீ.சோமதாஸ உள்ளிட்ட அலுவலர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

2 (17)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்