4 (10)

வரட்சி நீங்கி மழை கிடைக்கவும் நாட்டுக்கு சுபீட்சம் வேண்டியும் 2016 டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி திம்புலாகலை சொரிவில தேவாலயத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் மகாவலி விவசாயிகளுடன் இணைந்து மேற்கொண்ட நேர்ச்சையின் பயனாக  உரிய காலத்தில் மழை கிடைத்து  பொலன்னறுவையில் உள்ள வயல் நிலங்கள் வளமும் செழுமையும் பெற்றதற்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இலங்கை மகாவலி அதிகார சபையின் முழுமையான பங்களிப்புடன் நேர்ச்சையை நிறைவேற்றும் நிகழ்வு இன்று (09) முற்பகல் திம்புலாகலை சொரிவிலை தேவாலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டார். ஜனாதிபதி அவர்கள் அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மகாவலி விவசாயிகளினால் பெரும்போகத்தில் பெற்றுக்கொண்ட முதல் அறுவடையிலிருந்து பால் பொங்கவைக்கும் நிகழ்வும் இதனுடன் இணைந்ததாக நடைபெற்றது. தேவாலய வளாகத்தில் ஆதிவாசிகளால் நடத்தப்பட்ட கலாசார நிகழ்வுகள் மற்றும் சொரிவில பாடசாலை பிள்ளைகளால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி என்பவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் மகாவலி அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவர்கள் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நச்சுத்தன்மையற்ற விவசாயத்துறையின் ஊடாக அதிக அறுவடையை பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் கண்காட்சியும் இங்கு இடம்பெற்றது. இதனையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

மேலும் இந்;திக மானவடுவினால் பராக்கிரம சமுத்திரம் தொடர்பாக 18வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. வடமேல் மாகாண சபை உறுப்பினர் சம்பத் ஸ்ரீ நிலன்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்> பொலன்னறுவை மாவட்ட செயலாளர்> மகாவலி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 (11)

3 (8)

4 (10)

6 (10)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்