002

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளரும், ஐ நா அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதியுமான ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விசேட அனுதாபக் குறிப்பொன்றை பதிவு செய்தார்.

 

இன்று (25) பிற்பகல் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருக்கும் விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபச் செய்தியொன்றை பதிவு செய்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொலைநோக்கு குறித்து சிறந்த  தெளிவுடன் இலங்கையில் செயற்பட்ட திறமைவாய்ந்த துறைசார் அதிகாரியான ஊனா மொக்கோலியின் மறைவுக்கு  அனுதாபங்களை தெரிவித்தார்.

 

அவரின் மறைவு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஊனா மெக்கோலியின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும், ஐ நா அமைப்பின் இலங்கை பணிக்குழாமினருக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

001 (1)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்