4

வலுவான எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதே நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக எமக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய பொறுப்பும் கடமையுமாகும்  என்றும் எதிர்கால சந்ததியினருக்காக சிறந்தவொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்  என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற சமுர்த்தி சிறுவர்  சமூக, கலாச்சாரம் மற்றும் இலக்கிய நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாளைய உலகை வெல்லும் நாட்டை, பிள்ளைகளின் கைகளில் மறைந்துள்ள ஆக்கத்திறன்மிக்க கலை இலக்கிய ஆற்றல்களுடன் உணர்வுபூர்வமான எதிர்கால சந்ததியினரை கொண்டதாக கட்டியெழுப்பும் நோக்குடன் சமுர்த்தி கெகுளு சிறுவர்  சமூகத்தினூடாக இவ்விலக்கிய விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என்பவற்றுடன் இணைந்த சிறந்த எதிர்கால சந்ததியினராக பிள்ளைகளைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் நாட்டின் சகல இன மக்களுக்கும் இடையில் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகொள்வதற்கும் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் என்பன மிக முக்கியமான காரணிகளாக அமைகின்றன என்றும் தெரிவித்தார்.

விசேட ஆற்றல்களை வெளிக்காட்டிய சிறுவர்  சிறுமிகளுக்கான பரிசில்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர்  கெகுளு சமூகத்தை நெறிப்படுத்தும் மாவட்ட செயலாளர்களுக்கும், திவிநெகும திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் விருதுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்  எஸ்.பீ. திஸாநாயக்க, பிரதியமைச்சர்  ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சின் செயலாளர்  மகிந்த செனெவிரத்ன, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹபுஹின்ன ஆகியோர்  உள்ளிட்ட அரச அதிகாரிகளும், சமுர்த்தி கெகுளு சிறுவர்  சமூகத்தின் சிறுவர்  சிறுமிகளும் பெருமளவில் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

1

7

6

5

3

2

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்