13

அரசாங்கத்தின் புதிய கல்வித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் எந்தவொரு பட்டதாரியூம் தொழில் கேட்டு போராட்டங்களில் ஈடுபடும் நிலைமைகளுக்கு இடம் வைக்காது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கல்வித்திட்டத்தின் நோக்கம் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுகின்ற ஒரு இளைஞன் சமூகத்திற்கு பெறுமதியான சேவையை வழங்கக்கூடிய ஒரு முக்கிய பிரஜையாக இருப்பதை உறுதி செய்வதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (24) காலை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உலகில் இன்று துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் கல்விசார் நியமங்களுக்கேற்ப கல்வி முறைமையில் அரசாங்கம் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களின் பிரதான இலக்காக பாடசாலைப் பிள்ளைகளே உள்ளனர் எனத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் விற்பனைக்கு முடிவூகட்டி நாட்டின் எதிர்காலத் தலைமுறையை பாதுகாப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

போதைப்பொருளை ஒழித்து பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணத்துடன் இருப்பதாகவூம் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சூழல் பாதுகாப்பு மற்றும் சுதேச பொருளாதாரத்தில் பிரதான கவனத்துடன் பொருளாதார அபிவிருத்தி ஆகிய இரண்டும் அடுத்த இரண்டு முன்னுரிமைப்படுத்தலுக்குரிய அம்சமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியை பண்டாரநாயக்க கல்ல}ரி மாணவர்கள் கோலாகலமாக வரவேற்றதுடன் பாடசாலை சாரணர் பிரிவினால் அணிவகுப்பு மரியாதையூம் வழங்கப்பட்டது.

வர்த்தகம்இ விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய 25 மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களையூம் வழங்கி வைத்தார். சிறந்த சேவையை வழங்கிய ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

17 16 12 11 10 09 08 06 05 03 02

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்