3

கடந்த யுத்த சமயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பிரேரணைகளில் இந்த நாட்டின் எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தான் தயாரில்லை என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் இன்று (29) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தாய்நாட்டுக்காக போராடிய வீரமிகு படையினரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகுமென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் வீரமிக்க படையினர் தொடர்பில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் பொறுப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

 

இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்திராத சர்வதேச நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு இந்த யுகத்தில் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அதன் பயன் என்னவென சிலர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் இந்த சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை நாட்டினதும் மக்களினதும் கௌரவத்தையும் வீரமிக்க படையினரையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

 

இலங்கையின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் படையினர் தொடர்பில் எழும் சிக்கலான நிலமைகளின் போது நேரடியாக இலங்கையுடன் இருப்பதாக உலகின் பலமிக்க அரச தலைவர்கள் தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

போர் இடம்பெற்ற காலத்தில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய படை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போர் வீரர்கள் தொடர்பில் ஏற்படும் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தான் பொறுப்புக் கூறுவதாக அனைவரிடமும் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

 

அத்துடன் தேசிய பாதுகாப்புடன் தொடர்பற்ற விடயங்களில், அதாவது ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்களின் கொலை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் யாராவது ஒருவர் தவறிழைத்திருந்தால், அவர் எந்த தரத்திலிருந்தாலும் அவரை பாதுகாக்கும் இயலுமை தனக்கு இல்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இன்று முற்பகல் குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

 

நினைவு படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்கிய ஜனாதிபதி அவர்கள் அங்கு கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.

 

05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய மற்றும் விளையாட்டில் ஆற்றலை வெளிப்படுத்திய கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கியதுடன், பல்கலைக்கழக தகைமை பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில், ஆங்கிலக் கல்வி மற்றும் சுயதொழில் பாடநெறிக்கான புலமைப்பரிசில்கள் போன்றவற்றையும் ஜனாதிபதி வழங்கினார்.

 

அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பீ.நாவின்ன, தயாசிறி ஜயசேகர, அகில விராஜ் காரியவசம், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க மற்றும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் அதிபர் டி.ஏ.ரத்நாயக்க மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1

2

4

8

6

7

9

11

14

13

12

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்