1 (7)

இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் மற்றும் உலக பௌத்த மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“சமூக நியாயம் மற்றும் பேண்தகு உலக அமைதிக்கான பௌத்த கற்பித்தல்” எனும் தொனிப்பொருளில் 2017 மே 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கையில் சர்வதேச வெசாக் நிகழ்வு கோலாகலமாக நடைபெறவுள்ளது. அது தொடர்பான அனைத்து விபரங்களும் unvesak2017.org  எனும் புதிய இணையதளத்தில் உள்ளன.

அதிவணக்கத்துக்குரிய கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர், அதிவணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், அதிவணக்கத்துக்குரிய பலாங்கொட சோபித தேரர், புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சட்ட தொகுதி தயாரிக்கப்பட்டு, முதலாவது சட்ட தொகுதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ அவர்களால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, ஐக்கிய நாடுகள்  அபிவிருத்தி நிதிய இலங்கைக்கான நிலையான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

3 (8) 4 (7)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்