11

மனிதாபிமானம், கருணை மட்டுமன்றி நற்பண்புகளையும் இல்லாமற்செய்து போட்டிக்கு மட்டும் முகங்கொடுக்கும் தற்போதய சமூகத்தை சுகப்படுத்தக்கூடிய ஒரேயொரு வழி சமய கோட்பாடுகளே என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஆகவே இளம் தலைமுறையினரை வழிபாட்டு மையங்களுக்க ஈர்த்து சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு சமயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாக ஒன்று சேர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ரத்தினபுரி, பெல்மதுல்ல கணேகம அரமணபொல ரஜமகா விகாரையின் பொன்வேலி மற்றும் அட்டவிசி விகாரையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (26) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அனைத்து விகாரைகளிலும் ஆத்மீக ஆறுதலை வழங்கி சுகப்படுத்தலே மக்களுக்கு வழங்கப்படுவதனால் இந்த வழிபாட்டிடங்கள் விகாரைகளில் புதிதாக இணைதலானது விகாரைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கம் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு பலமாக இருக்குமெனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

இரத்தினபுரி – பெல்மடுளை நெடுஞ்சாலையை நோக்கியதாக சிறிய மலையொன்றில் அமைந்துள்ள கணேகம ரஜமகா விகாரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்டது.

 

அனுராதபுர ஜயஸ்ரீபோதியைப் போன்ற அரச மரம் இந்த விகாரையில் வியாபித்தள்ளதுடன், தற்போதுள்ள தெதிஸ்பல போதிகளில் மிகப் பெரியதாகவும் காணப்படும் சாத்தியம் உள்ளது.

 

இன்று பிற்பகல் விகாரைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள், மதவழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். விகாராதிபதி வண. பாதகட விமலரதன தேரரை அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்பின்னர் நடைபெற்ற நிகழ்வில் அதிவணக்கத்துக்குரிய வறக்காகொட ஞானரத்ன தேரர் வழிபாடுகளை நடத்தினார்.

 

அதிவணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர், அதிவணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதித்த நாயக்க தேரர் உள்ளிட்ட மதகுருமார்களும், அமைச்சர் தலதா அத்துகோரள, பிரதி அமைச்சர்களான துனேஸ் கன்கந்த, கருணாரத்ன பரணவிதான, சப்ரகமுவ மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02

03

04

05

06

07

08

09

10

12

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்