1 (2)

மத்திய மாகாணத்தின் மிகப் பெரிய விளையாட்டரங்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி, திகனை விளையாட்டரங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (01) பிற்பகல் திறந்து வைத்தார்.

 

ஓடுபாதை, நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்கு, உள்ளக பயிற்சிக்கூடம், கரப்பந்தாட்டத்திடல், வலைப்பந்தாட்டத்திடல் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் ஆகியன உள்ளடங்களாக பூரண வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்விளையாட்டரங்குக்கு 338 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி மத்திய மாகாண சபையினாலும் மத்திய அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டுள்ளது.

 

நினைவுப் பெயர்ப் பலகையை திறந்துவைத்த ஜனாதிபதி, விளையாட்டரங்கை சுற்றிப் பார்வையிட்டார்.

 

கண்டி மகாமாய பெண்கள் கல்லூரி மாணவிகளின் நீச்சல் போட்டிகளையும் கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

 

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண விளையாட்டமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

3 (2) 4 (2) 5 (1) 6 (3)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்