01

தேசிய பால்சார் உற்பத்திக் கைத்தொழிலுக்கு பாரிய முதலீட்டை சேர்க்கும் வகையில் காகில்ஸ் நிறுவனத்தினால் மீரிகம பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொத்மலை புதிய பாற்பண்ணையை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (03) முற்பகல் திறந்து வைத்தார்.

 

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய பாற்பண்ணையை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்

 

கால்கில்ஸ் நிறுவனத்தின் “சருதின” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில்களும், மடிக் கணனிகளும் ஜனாதிபதி அவர்களால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

 

அப் புலமைப்பரிசிலை பெற்ற கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சியானுகா என்ற மாணவியினால் இதன்போது உரையொன்று ஆற்றப்பட்டதுடன், அம்மாணவியை தமது அருகில் அழைத்த ஜனாதிபதி அவர்கள் அம்மாணவியிடம் அவரது பாடசாலையின் விபரங்களைக் கேட்டறிந்தார்.

 

தனது பாடசாலையில் காணப்படும் சில குறைகளை அம்மாணவி ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்ததுடன், அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பீ.ஹெரிசன், காகில்ஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் லுவிஸ் பேஜ், பிரதி தலைவர் ரஞ்சித் பேஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

01

02

06

07

08

10

11

12

14

15

17

18

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்