01(4)

அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இலங்கை காலணி மற்றும் தோற்தொருள் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று (11) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

 

மாற்று உற்பத்திகள் அதிரிப்பு காரணமாக கூரைஓடுகளை விற்பனை செய்ய முடியாமையினால்  ஏற்படும் இன்னல்களையும், களியை பெறுவதிலான சிரமங்கள் தொடர்பிலும் ஓடு உற்பத்தியாளர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.

 

வெளிநாட்டு உற்பத்திகள் காரணமாக தமது தொழிற்துறை முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அகில இலங்கை காலணி மற்றும் தோற்தொருள் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் எடுத்துக்கூறினார்கள்.

 

குறித்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அவர்கள் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, தொடர்புடைய அமைச்சுக்களின் அலுவலர்கள் மற்றும் அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இலங்கை காலணி மற்றும் தோற்தொருள் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்