03

இலங்கை அவுஸ்திரேலிய இருதரப்பு உறவுகளின் மைல்கல்லாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம்  டேர்ன்புல் அவர்களின் அழைப்பின்பேரில் அவுஸ்திரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (24) முற்பகல் கென்பரா நகரில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் கென்பரா நகரில் உள்ள சூரிய மின்சக்தி நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

 

பின்னர் கென்பரா நகரில் உள்ள கம்பா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், வழிபாடுகளில் ஈடுபட்டு அவுஸ்திரேலிய தூதரகத்தில் இடம்பெற்ற இலங்கை மக்களுடனான நட்புறவு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை முற்பகல் அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

 

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02 04 05 06

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்