1

ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பிரதான விகாரை ஒன்றை மையப்படுத்தி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும் சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் 45வது சமய உரை நிகழ்ச்சி இன்று (22) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கம்பஹா சர்வதேச சாம விகாரையில் இடம்பெற்றது.

 

இன்று காலை விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சமயக் கிரியைகளில் பங்குபற்றியதன் பின்னர் விகாராதிபதி சங்கைக்குரிய தலங்கல்லே சோமசிறி தேரரை சந்தித்து பூஜைப் பொருட்களை அன்பளிப்பு செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அங்கு இடம்பெற்ற சமய உரையை செவிமடுத்தார்.

சங்கைக்குரிய கலிகமுவே ஞானதீப தேரரினால் இன்றைய சமய உரை நிகழ்த்தப்பட்டது. தேரர் அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் பூஜைப் பொருட்களை அன்பளிப்பு செய்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்

 

அமைச்சர்கள், ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2

3

4

5

6

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்