03

சகல மக்களதும் பிரார்த்தனையாகிய சமாதானத்தை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பலப்படுத்தவும் நத்தார் பிறப்பு மிக முக்கியமானதொரு வாய்ப்பாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று (16) பிற்பகல் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற அரச நத்தார் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஆன்மீக சிந்தனைகளையும் மேம்படுத்தும் நோக்கில்  “இயேசு பாலனின் பிறப்பும் நத்தார் கொண்டாட்டமும்“ எனும் தொனிப்பொருளின் கீழ் மிக கோலாகலமாக இம்முறை தேசிய நத்தார் கொண்டாட்டம் பல்லின சமூக மக்கள் இணைந்து வாழும் மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

நத்தார் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், இயேசு கிறிஸ்துவின் செய்தியை உலகத்தினர் மத்தியில் கொண்டு செல்லும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெறும் கொண்டாட்டங்களில் கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் அனைத்து மக்களும் ஒன்றிணைகின்றனர் என தெரிவித்தார்.

ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்த சமூகமொன்றினை உருவாக்குவதற்கும் கிறிஸ்தவ மத கொள்கைகள் சிறப்பான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கரோல் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் அரச நத்தார் கொண்டாட்டம் கோலாகலமாக இடம்பெற்றதுடன், 2018 அரச நத்தார் கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெற்ற போட்டிகளின் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டன.

இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் அதிவண. ஆயர் பியேரே நுயென் வேன் வோட், இலங்கை கத்தோலிக்க பேராயர்கள் மன்றத்தின் தலைவர் அதிவண. ஆயர் வின்சன்ட் பெர்ணான்டோ, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண. எம்மானுவேல் பெர்ணான்டோ உள்ளிட்ட திருத்தந்தையர்கள், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான கிறிஸ்தவ மக்கள் அரச நத்தார் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
01

04

05

06

07

09

10

11

12

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்