02 (12)

சிறந்த சமையல் கலைஞர்களின் திறமையை வெளிக்காட்டும் சமையற்கலை கண்காட்சி (Culinary Art Food Expo 2017) மற்றும் போட்டி நிகழ்ச்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

 

இலங்கை சமையற் கலைஞர்கள் சங்கத்தினால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி இன்று முல் 30ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

 

நாடெங்கிலும் உள்ள சிறந்த சமையற் கலைஞர்களுக்கு  சர்வதேச மட்டத்தில் புகழ்பெற்ற சமையற் கலைஞர்கள் முன்னிலையில் தமது திறமைகளை வெளிக்காட்டவும் உணவு தயாரிப்புத்துறையில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளவும் இதன்மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.

 

1800க்கும் மேற்பட்ட சமையற் கலைஞர்கள் இந்த உணவு தயாரிப்பு போட்டியில் பங்குபற்றுவதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடுவர்களினால் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

 

உணவு மற்றும் உபசரிப்புத்துறையைச் சேர்ந்த பெருமளவானவர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களுக்கு இத்துறையில் வியாபார சந்தர்ப்பங்கள் மற்றும் தொடர்புகளை கட்டியெழுப்பவும் அறிவை பகிர்ந்துகொள்வதற்குமான நிகழ்ச்சித்திட்டமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 

அமைச்சர் ஜோன் அமரதுங்க, இலங்கை சமையற் கலைஞர் சங்கத்தின் தலைவர் ஜெராட் மெண்டிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

03 (11)

05 (7)

06 (9)

08 (5)

09 (5)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்