Presidential Media Unit Default Banner

இந்தியாவில் புது டில்லி நகரத்தில் நாளை 11 ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (10) பிற்பகல் புது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

 

இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான செயலாளர் திருமதி ருச்சிகன் ஷாம் விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை வரவேற்றார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி அவர்கள் தங்கியுள்ள தாஜ் ஹோட்டலில் தூதரக அதிகாரிகளினால் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

 

ஜனாதிபதி அவர்களின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் இணைந்துள்ளார்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்