1 (5)

கல்வித்துறையில் தேர்ச்சிபெற்ற தன்னம்பிக்கையுள்ள சிறந்த இளைஞர் தலைமுறையை நாட்டில் கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இதற்குத் தேவையான வழிகாட்டலை தற்போது அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்புவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

நேற்று (10) பிற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை இளைஞர் சக்தி’ என்ற இளைஞர் முகாமின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வினைத்திறன் மிக்க வகையில் பங்களிக்கக்கூடிய தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆளுமைப் பண்புகளைக் கொண்ட இளைஞர் தலைமுறையை உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவின் படி இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர் முகாம் தொடரின் முதலாவது நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும். இந்த முகாம் மார்ச் மாதம் 10,11,12 ஆகிய திகதிகளில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நடைபெறுகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஒரு மாவட்டத்தை மையமாகக்கொண்டு அதிகளவு இளைஞர், யுவதிகளின் பங்குபற்றுகையுடன் இவ்வாறானதொரு மூன்று நாள் இளைஞர் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும் என ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்மாதிரி நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருளிலிருந்து விடுதலைபெற்ற இளைஞர் தலைமுறையை உருவாக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டின் இளைஞர் தலைமுறை சிறந்த கல்வியையும் ஒழுக்கப்பண்பாடுகளையும் கொண்டவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர் தலைமுறையினருக்கும்

மக்களுக்கு சிறந்த செய்தியை வழங்க வேண்டியது ஊடகத்துறையின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பொறுப்புக்களை நிறைவேற்றி இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டலை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டார்.

இளைஞர் முகாமுக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை இளைஞர் யுவதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2 (6) 4 (6) 5 (5) 7 (4) 8 (3) 9 (3)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்