01 (30)

செப்டெம்பர் 12 ஆம் திகதி இடம்பெறும் தேசிய சிறைக் கைதிகள் தினத்திற்கு சம காலத்தில் சிறைக் கைதிகளின் நலன்பரிச் செயற்பாடுகளை நோக்காகக் கொண்டு, வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கொடி வார ஆரம்பத்தை முன்னிட்டு அதன் முதலாவது கொடியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை சிறைக் கைதிகளின் நலன்புரிச் சங்கம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் என்பவற்றின் இணை ஏற்பாட்டில் இந்த கொடி வாரம் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், சிறைக் கைதிகளுக்கான மருத்துவ வசதிகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் சிறைக் கைதிகளின் குடும்பத்தினருக்கான பல்வேறு சமூக நல செயற்பாடுகளும் இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை சிறைக் கைதிகளின் நலன்புரிச் சங்கத்தின் கருத்திட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆர்.ஏ.டீ. சிறிசேனவினால் முதலாவது கொடி ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டதுடன், அமைச்சர்களான டீ.எம். சுவாமிநாதன், துமிந்த திஸாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்ஸா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

02 (20)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்