02

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சீன உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

கடந்த சில காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த காலநிலை தாக்கங்களின் காரணமாக அரசாங்கம் ஆரம்பித்த நிவாரண நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இந்த தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ததனை குறிக்கும் வகையில் அவற்றின் சாவிகள் மற்றும் ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார். அவ் ஆவணங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்தார்.

 

ஜனாதிபதியின் செயலாளர் உதய.ஆர் செனவிரத்ன மற்றும் சீன தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

03

04

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்