03

மக்கள் மத்தியில் வறுமை நிலை உயர்வடைவதற்கு போதைப்பொருள் பாவனையே முதன்மை காரணியாக காணப்படுவதுடன், சுபீட்சமிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடுகள் மிகவும் அவசியமாகும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

பொலன்னறுவை பெந்திவெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (27) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவையிலுள்ள நான்கு பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தொகுதிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று மாணவர்களிடம் கையளித்ததுடன், இவற்றுக்கான மனித வலு பங்களிப்பு இலங்கை இராணுவத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சகல வசதிகளையும் கொண்டதாக பெந்திவெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடத் தொகுதிக்காக 176 இலட்ச ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றதுடன், நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

 

பொலன்னறுவை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

பொலன்னறுவை இலுக்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி அவர்கள் இன்று (27) முற்பகல் மாணவர்களிடம் கையளித்ததுடன், 106 இலட்ச ரூபா செலவில் இந்த வகுப்பறைக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றதுடன், நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

 

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களின் தேவைகளை இனங்கண்டு உரிய செயற்திட்டங்களுக்காக செலவிடப்படாமையினால் இன்னும் கிராமிய மட்டத்தில் தீர்க்கப்படாத பல அபிவிருத்தி பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவித்தார்.

 

வழங்கப்படும் நிதியினை மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உரியவாறு முதலீடு செய்தல் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்களின் தேவைகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை அறியத்தர வேண்டியது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

 

பாடசாலையின் அதிபர் கே.ஏ.ரேணுகா களுகம்பிட்டிய, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

அதன்பின்னர் மொரகஸ்வெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் இன்று (27) பங்குபற்றினார். இதற்காக 70 இலட்ச ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

 

பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றதுடன், ஜனாதிபதி அவர்களின் வருகையினை நினைவுகூரும் வகையில் சந்தன மரக்கன்றொன்றையும் ஜனாதிபதி அவர்கள் பாடசாலை வளாகத்தில் நாட்டினார்.

 

அதனைத்தொடர்ந்து கடவலவெவ கனிஷ்ட வித்தியாலயத்தில் 138 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

 

பாடசாலையின் அதிபர் டி.எச்.சி.எஸ்.குமாரசிறி உள்ளிட்ட ஆசிரியர்கள் குழாமினர், பெற்றோர், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

08

09

10

11

12

13

14

15

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்