02 (32)

இலங்கைக்கும்  பாகிஸ்தானுக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், சீனி மற்றும் சீமெந்து கைத்தொழில் துறையில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு  பாகிஸ்தான் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.   இருதரப்பு அரசியல் மாநாட்டின் 5 ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்காக   வருகை தந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் Tehmina Janjua அம்மையாரை இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்படி அழைப்பை விடுத்தார்.  …

02 (31)

கொழும்பு ரோயல் கல்லூரியின் 165 ஆவது பரிசளிப்பு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (16) பிற்பகல் இடம்பெற்றது. நிகழ்வில்   உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், பிள்ளைகளை பரீட்சைகளுக்கு  தயார்படுத்துவதுடன், பரீட்சை பெறுபேறுகள் வந்தவுடன் சில பெற்றோர் பிள்ளைகள் மீது பிரயோகிக்கும் மோசமான பண்பற்ற பிரதிபலிப்பு  தொடர்பில் பெற்றோரை தெளிவுபடுத்தும் செயற்திட்டம் பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்தப்பட  வேண்டுமென  தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் நாட்டில் ஏற்படும் அவ்வாறான பல…

01 (37)

பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் மாகாண சபைகளினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.   பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.   தற்போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள வடமத்திய> சப்ரகமுவ மற்றும் கிழக்கு…

Presidential Media Unit Default Banner

எதிர்கால சந்ததியினருக்காக சுற்றாடலைப் பேணுவதற்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டிய சகல செயற்திட்டங்களும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.   இன்று (16) முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற Sri Lanka NEXT நீல பசுமை யுகத்திற்கான தேசிய செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு…

3

2017ஆம் ஆண்டு தேசிய தீபாவளி விழா இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தயாராகிவருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து இந்துக்களுக்கும் ஜனாதிபதி அவர்களும் பிரதமரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமையளித்து விழா நடைபெற்றதுடன், எதிர்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன், அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள்…

Page 1 of 3681 2 3 368

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்