01 (4)

மறைந்த பிரபல நடிகர் டோனி ரணசிங்க அவர்களின் பூதவுடலுக்கு நேற்று (17) இரவு கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். கொழும்பு 09 சிரிதம்ம மாவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு சென்ற கௌரவ ஜனாதிபதி அவர்கள் டோனி ரணசிங்க அவர்களின் மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தன்னுடைய அனுதாபத்தையும் தெரிவித்தார். இன் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும்  கலந்துகொண்டார்.

02 (2)

புதிதாக அமைக்கப்பட்ட காலிமுகத்திடல் சுற்றுவட்டம் சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (17) இரவு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள சுற்றுவட்டம் அலங்கார நீர்த்தூவி முறைமையையும் மின்னொளி முறைமையையும் கொண்டுள்ளது. இச்சுற்றுவட்டம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி இலங்கையில் முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள் சில அமைந்துள்ளன. அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் தினசரி உலாவுகின்ற வலயமாக இது இருப்பது சிறப்பம்சமாகும். இதை நிர்மாணிக்கின்றபோது இலங்கையின் அடையாளத்தை எடுத்துக்காட்டுகின்ற சிங்க உருவங்களும் ஏனைய…

01 (2)

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு விடைப் பெற்றுச் செல்லும் சவுதி அரேபிய தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜம்மாஸ் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். தூதுவர் அசீஸ் அல் ஜம்மாஸ் அவர்களது சேவைக் காலப்பகுதியில் இரு நாடுகளுக்கிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வையும் பொருளாதார கூட்டுறவையும் அபிவிருத்தி செய்வதற்காக அவர் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஜனாதிபதி பாராட்டினார். சவுதி அரேபிய அரசாங்கம் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்காக இலங்கைக்கு பல ஆண்டுகளாக வழங்கிவரும்…

04

தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையின் சுரங்கங்களில் சேவையாற்றிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த மற்றும் உடல் ஊனமுற்ற நிலைக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. லுனுகல பிரதேசத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததாலும் கிலிமலே பிரதேசத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விஷ வாயு கசிவின் காரணமாகவும் உயிரிழந்த மற்றும் உடல் ஊனமுற்ற நிலைக்குள்ளான ஐவருக்கு ஜனாதிபதி அவர்களால் நட்டஈடு வழங்கப்பட்டது. உயிரிழந்த…

01

புதிய விமானப்படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற ஏயார் மாசல்  திரு.ககன புலத் சிங்கள இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபல சிறிசேன அவர்களைச் சந்தித்தார். பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அது பற்றி அரச தலைவருக்கு அறிவிக்கும் பாரம்பரியத்தை நிறைவேற்றிய விமானப்படைத் தளபதி இவ்வாறு ஜனாதிபதியைச் சந்தித்தார். திரு. ககன புலத் சிங்கள இலங்கையின் 15வது விமானப்படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை குறிக்கமுகமாக ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கினார்.

Page 607 of 637 1 605 606 607 608 609 637

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்