01

செவிப்புலனற்றோருக்கான 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் உலக கோப்பையை வெற்றிபெற்ற இலங்கை அணியினர் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டி அண்மையில் இந்தியாவில் டில்லி நகரில் இடம்பெற்றது. இலங்கை விளையாட்டு வீரர்களின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி அவர்களால் கிரிக்கட் குழுவினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செவிப்புலனற்றோருக்கான கிரிக்கட் சங்கத்தின் தலைவர் அனுலா ரஞ்சனி, பயிற்சியாளர்களான ஜயலத் அபோன்சு, சுஷாந்த குணரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்