02

உலக வனசீவராசிகள் தினத்தை முன்னிட்டு நாட்டின் வனசீவராசிகள் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை கௌரவிக்கும் வகையில் பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட ‘சேவா பிரசாதனீ அபிசெஸ்’ விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (03) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 10 விசேட சேவை விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுச்சின்னம்  வழங்கி வைக்கப்பட்டது.

பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜீ. ஜயசேன, அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பீ.டீ. மீகஸ்முல்லை ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

03

04

05

06

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்