Presidential Media Unit Default Banner

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

 

ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் அதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் மு்னனேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மொரகஹகந்த திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடமேல் கால்வாய் அபவிருத்திக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், எதிர்காலத்திலும் கிராமிய வறிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் இத்தகைய பல்நோக்கத் திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்க தயாராக இருப்பதாக அதன் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

குறிப்பாக கிராமிய வறிய மக்களை வலுவூட்டும் நோக்குடன் விவசாயத் துறையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கிடைக்கும் உதவியை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

கிராமிய விவசாய சமுகத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீர்ப்பாசனத் துறையில் விரிவான அபவிருத்தி நிகழ்ச்சித் திட்டமொன்றை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்காக தொடர்ந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 

வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் சில திட்டங்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிற்துறையை கட்டியெழுப்புவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், தேசிய கைத்தொழிற்துறையை முன்னேற்றுவதன் மூலம் ஏற்றுமதி இயலுமையை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கு உதவுமாறு ஆசிய அபிவிருத்தி வங்கி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

இந்த அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் உடனடியாக ஆராய்ந்து வழங்க முடியுமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் இணக்கம் தெரிவித்தார்.

 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், இலங்கை விவகாரங்களுக்கான அணித்தலைவருமான சாத்ரபதி சிவாஜி உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஜனாதிபதி அவர்களின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் கலாநிதி சரத் ராஜ பத்திரன, தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்