02(1)

அண்மையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

 

அறிவு மற்றும் அனுபவத்துடன் நாட்டுக்கு உயர் சேவையை பெறவேண்டியதன் தேவையை குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தொழில் ரீதியான நடவடிக்கைகளை சுயாதீனமாக மேற்கொள்வதற்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அச்சமயம் குறிப்பிட்டார்.

 

ஜனாதிபதி சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாணம் செய்ததன் பின்னர், பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

 

இந்நிகழ்வில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும்  இணைந்துகொண்டார்.

01(3)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்