05 (13)

புத்தபிரானின் பாதம்பதிந்த வரலாற்று பெருமைமிக்க நாகதீப ரஜமகா விகாரைக்கு இன்று (17) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

விகாராதிபதி நவந்தகல பதுமகித்திதிஸ்ஸ தேரரைத் தரிசித்து, அவரது நலன்களை விசாரித்து துறவிகளுக்கான காணிக்கையை செலுத்தினார்.

பின்னர் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், நாகதீப புராண ரஜமகா விகாரையிலுள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

ருவன்வெலிமகாசாய விகாராதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரும் ஜனாதிபதி அவர்களது இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.

நாகதீப விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

01 (20)

02 (20)

03 (17)

04 (16)

06 (15)

07 (14)

08 (10)

09 (9)

10 (15)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்