03

மாளிகைகளை புறக்கணித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களுக்காக சேவைபுரிந்த ஜனாதிபதி அவர்கள் இன்று நாட்டுக்கும் புத்தசாசனத்திற்கும் ஒரு உன்னதமான பணியினை மேற்கொண்டு வருகிறார் என்று சியாமோபாலி மகா நிக்காயாவின் மல்வத்து மகா விகாரை அநுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் தெரிவித்துள்ளார்.

 

போதைப் பொருட்களிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காக ஆன்மீகம் சார்ந்த நற்பழக்கங்களின் ஊடாக நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவதற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பாரிய  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த தேரர், எதிர்வரும் வருடம் மாத்திரமன்றி மேலும் ஐந்து வருடங்கள் நாட்டின் ஜனாதிபதியாக பணிபுரிந்து நாட்டினதும் நாட்டு மக்களினதும் செல்வச் செழிப்பிற்காக பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

 

இன்று (09) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விகாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தபோதே மல்வத்து அநுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாவிதான தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

புத்த சாசனத்தின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 60 விகாரைகளுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களால் ஒரு சில தேரர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

 

அமைச்சர்களான சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, பிரதியமைச்சர் எட்வேர்ட் குணசேகர, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.எச்.கருணாரத்ன ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02

03

04

05

06

07

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்