Presidential Media Unit Default Banner

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) காலை பங்களாதேஷ் பயணமானார்.

 

இந்த விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளார்.

 

பங்களாதேஷ் பிரதமரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் செல்லும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை கோலாகலமாக வரவேற்பதற்கான ஏற்பாடுளை பங்களாதேஷ் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

 

இப்பயணத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, பிரதி அமைச்சர்களான லசந்த அலகியவன்ன, நிசாந்த முதுஹெட்டிகம ஆகியோர் இணைந்துகொண்டுள்ளனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்