08

பிறந்திருக்கும் புத்தாண்டில் அலுவல்களை ஆரம்பிக்கும் வகையில் இன்று காலை (01) முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க சோமாவதி  புண்ணிய பூமிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் அங்கு சமய கிரியைகளில் ஈடுபட்டார்.

 

சோமாவதி ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற விசேட சமய கிரியைகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.

 

இன்றைய தினம் சோமாவதி விகாரையில் இடம்பெற்ற விசேட கப்றுக்க பூஜையிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

 

புத்தாண்டில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக சோமாவதி புண்ணிய பூமிக்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு பாற்சோறு மற்றும் இனிப்பு வகைகள் பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அன்னதான நிகழ்வை ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

 

அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

 

“எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சோமாவதி புனித பூமியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி சமய உரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டதுடன், நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

 

இதேநேரம் ஜனாதிபதி அவர்கள், நேற்று பிற்பகல் (31) அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயசிறி மகா போதிக்கு சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டு புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

 

அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறிநிவாச நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அவரது சுக துக்கங்களையும் கேட்டறிந்தார்.

 

வரலாற்று முக்கியத்துவமிக்க ஜயசிறி மகா போதி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், ருவன்வெளி சேயவில் சமய கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார் ருவன்வெளி சேய விகாராதிபதி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரரை சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்ததுடன், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.

 

ஜனாதிபதி அவர்கள் ருவன்வெளி சேய புனித வளாகத்தில் பவள மல்லிகை பூ மரக்கன்று ஒன்றை நாட்டினார்.

 

முன்னாள் அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, திஸ்ஸ கரலியத்த, முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

01

02

03

04

05

06

07

10

11

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்