01

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரணவின் ஒருங்கிணைப்பில் ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 150 மில்லியன் பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (24) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

 

ஜப்பான் இலங்கை நட்புறவு மன்றத்தின் தலைவர் கலாநிதி லால் திலகரத்னவினால் இதற்கான ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

 

இந்த இரண்டு தீயணைப்பு வண்டிகளையும் இலங்கை விமானப் படை மற்றும் ஹிங்குரான்கொட பிரதேச சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் ஹிங்குரான்கொட பிரதேச சபை தலைவர் என்.டீ.கே ரம்புக்கனகே ஆகியோரிடம் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன.

 

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரணவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

01

02

03

04

05

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்