2 (13)

திருகோணமலை டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டம் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

புதுப்பிக்கத்தக்க உயிரியல் எரிபொருள் பயன்பாட்டை பாரிய தொழிற்சாலைகளில் அமுல்படுத்தும் இலங்னையின் முன்னோடி தொழிற்சாலையான டோக்கியோ சீமெந்து நிறுவனம் 2.5 பில்லியன் ரூபா முதலீடு செய்து இந்த உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் மூலம் 70 கிகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும். சமூக அடிப்படை செயற்திட்ட எண்ணக்கருவிற்கமைய வழங்கப்படும் விவசாய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி இந்த மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

 

புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி கொள்ளவை 2017 ஆம் ஆண்டின் இறுதியளவில் 10 வீதத்தினால் உயர்த்துவதனை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. தனியார் துறையினரும் அந்த சூழல் நேய முயற்சியில் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், சுனாமியால் இடம்பெயர்ந்தோருக்கு  டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களையும் வழங்கி வைத்தார்.

 

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, டோக்கியோ சீமெந்து நிறுவன தலைவர் கலாநிதி ஹர்ஸ கப்ரால், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1 (12)

5 (11)

7 (7)

8 (6)

9 (6)

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்