இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

imd

நாட்டின் அனைத்து சவால்களையும் சமாளித்து தாய்நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய ஒரு தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இந்த நாட்டின் மக்கள் பார்க்கிறார்கள் என களனி பல்கலைக்கழக அதிபர். கலாநிதி வலமிதியே குசலதம்ம தேரர் கூறினார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) வித்யாலங்கா பிரிவேனாவுக்குச் சென்று வளாகத்தில் உள்ள நினைவுச்சின்ன சன்னதிக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஜனாதிபதி அவர்கள் வணக்கத்துக்குரிய . வலமிதியே குசலதம்ம தேரர் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழக அதிபர் வணக்கத்துக்குரிய . பேராசிரியர் கும்புகுமுவே வஜிரா தேரர் அவர்களை சந்தித்தார் .
“வித்யாலங்கராவின் புனித இடத்திற்கு ஜனாதிபதியின் வருகையானது ஒரு மரியாதைக்குரிய செயலாக காணப்படுகின்றது என “, வணக்கத்துக்குரிய . குசலதம்ம தேரர்.கூறினார்

இந்நிகழ்வின் போது ஜனாதிபதி அவர்கள் மகா சங்கத்திடம் ஆசிர்வாதங்களை பெற்றார் .

WhatsApp Image 2019-12-07 at 19.40.39
பின்னர் ஜனாதிபதி அவர்கள் களனி ரஜ மஹா விகாரைக்கு சென்று தலைமை பதவியில் இருக்கும் கொலுப்பிட்டிய மஹிந்த தேரர் , வணக்கத்துக்குரிய . பெங்காமுவே நலகா தேரர் மற்றும் இன்னும் பல தேரர்களை சந்தித்தார் .
ஜனாதிபதி தனது நல்ல பணி பொறுப்புகளைத் தொடர மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களை எப்போதும் பெறுவார். என கொலுப்பிட்டியே மஹிந்த தேரர் ஆசிர்வதித்தார் .
இவ் நிகழ்வில் கம்பகா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்