01 (3)

சூழலுக்கு பாரிய சவாலாக இருக்கின்ற திண்மக் கழிவூப்பொருள் முகாமைத்துவத்துக்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று தேவையென ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்போது சகல தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனவூம் ஜனாதிபதி கூறினார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வூ கூட்டத்தில் நேற்று (25) முற்பகல் கலந்துகொண்டபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மகாவலி அபிவிருத்தி விடயம் சம்பந்தமான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அத்துடன் சூழல் விடயத்திற்குரிய கலந்துரையாடல் பத்தரமுல்லை சூழல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் சூழல் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். திண்மக் கழிவூப்பொருள் முகாமைத்துவம் தொடர்பாக அதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் அதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்களையூம் அவற்றை செயற்படுத்துகின்றபோதும் ஏற்படுகின்ற சிக்கல்களும் அவற்றிற்கு வழங்கக்கூடிய தீர்வூகளையூம்பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

உள்ளுராட்சி நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பொறுப்புக்கள் ஒழுங்காக நிறைவேறாமை காரணமாக தோன்றியூள்ள பிரதான சிக்கலாக இருப்பதாக உத்தியோகத்தர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்துடன் பொருத்தமான காணிகளை தேடிக்கொள்வதில் உள்ள சிக்கல், தொல்லைத்தரக்கூடிய கழிவூப்பொருட்களை சட்ட விரோதமாக அகற்றுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவூம் கவனம் செலுத்தப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலின்போது மகாவலி அபிவிருத்தி அமைச்சு செயற்படுத்தியூள்ள கருத்திட்டங்களின்; முன்னேற்றமும் எதிர்கால திட்டங்களும்பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக அணைகளை பாதுகாக்கும் கருத்திட்டங்கள் ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்படுவதனால் தோன்றியூள்ள சிக்கல்கள் தொடர்பாகவூம் அதன்போது ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மொரஹாகந்த அபிவிருத்தி கருத்திட்டத்தில் காணி இழந்தவர்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக கவனம்  செலுத்தப்பட்டது.

சூழல் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மகாவலி அபிவிருத்தி, சூழல் பிரதி அமைச்சர் வசந்த அலுவிஹாரே, மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுர திஸாநாயக்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்