Presidential Media Unit Default Banner

திரைப்பட தொழிற்துறை மற்றும் தொலைக்காட்சி நாடக கலையின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக இத்துறைகளில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 

நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலைஞர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.

 

இலக்கியம், மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், திரைப்படம், வானொலி, நாட்டியம் உள்ளிட்ட அனைத்து கலைகள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து முறையான திட்டமொன்றை தயாரிப்பதற்கு நிபுணர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது கலந்துரையாடல் இதுவாகும்.

 

குறித்த துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 

திரைப்படத் துறையின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், தொலைக்காட்சி நாடக கலையின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு ஆலோசனை வழங்கினார்.

 

அனைவரினதும் அங்கீகாரத்துடன் ஊடக அணியொன்றை நியமிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

 

இவ்வனைத்து குழுக்களினதும் முன்மொழிவுகள் மற்றும் அறிக்கைகளை விரைவாக தயாரிப்பதற்கும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குழுக் கூட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது

 

பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் கலைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்