Presidential Media Unit Default Banner

பொலன்னறுவை லக்ஷஉயன கிராமத்தின் ஊடாக சோமாவதி பிரதேசத்தில் மகாவலி ஆற்றுடன் கலக்கும் கும்புக்கன் ஆற்றுக்கு குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பார்வையிட்டார்.

பழமைவாய்ந்த தீப்பெட்டி பாலம் பழுதடைந்த காரணத்தினால் அதற்கு மாற்றீடாக இப்புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

விவசாய குடியேற்றத் திட்டத்தின் ஆரம்ப காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட தீப்பெட்டிப் பாலம் மோசமாக பழுதடைந்திருந்த நிலையில், ஜனாதிபதி அவர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1331 இலட்சம் ரூபா செலவில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பல கிராமங்களை இணைத்து மிகவும் அழகிய முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாலம் நேற்று (07) பிற்பகல் மிகவும் எளிமையானதொரு நிகழ்வில் பிரதம அதிதிகள் எவருமின்றி மகா சங்கத்தினரின் பிரித் பாராயனத்திற்கு மத்தியில் பிரதேசத்தில் உள்ள சிறுவர் சிறுமியரினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று பிற்பகல் இப்பாலத்தை பார்வையிடச் சென்றிருந்த ஜனாதிபதி அவர்கள் பிரதேசவாசிகளுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

சங்கைக்குரிய கொஸ்ஸின்னெ பியரத்ன நாயக்க தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதேநேரம் பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் 53ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற பெரஹெர ஊர்வலத்தை ஜனாதிபதி அவர்கள் இன்று (08) முற்பகல் பார்வையிட்டார்.

பொலன்னறுவை நவ நகரவிலிருந்து ரோயல் கல்லூரி வரையில் இப்பெரஹெர ஊர்வலம் இடம்பெற்றதுடன், கல்லூரியின் அதிபர் ரவிலால் விஜேசிங்க உள்ளிட்ட ஆசிரியர்களும் பங்குபற்றினர்.

 

© 2017 - இலங்கை ஜனாதிபதி அலுவலகம்